Type Here to Get Search Results !

Bala Vinayagar Temple Vadapalani | பால விநாயகர் திருக்கோவில் வடபழனி

Bala Vinayagar Temple  Vadapalani | பால விநாயகர் திருக் கோவில் வடபழனி



        
                


மூலவர்   - பால விநாயகர்

தலை விருட்சம் - அரச மரம்

அரச மரத்தில் சுயம்புவாக தோன்றிய விநாயகர் , தமிழ்நாட்டில் புராண காலத்திலிருந்து பல்வேறு கோவில்கள் பிரசித்தி பெற்று விளங்கினாலும்,

 

சுமார் முப்பது வருடங்களுக்கு முன் சென்னையிலே பல்வேறு அற்புதங்களை தன்னுள்ளே கொண்டு அமைதியாக எழுந்தருளி இருக்கும் திருக்கோவில் வடபழனி பால விநாயகர் திருக்கோவில்.

 

பால விநாயகர் திருக்கோவில் பல்வேறு வியப்பிற்குரிய வரலாற்றைக் கொண்டு விளங்குகிறது. பால விநாயகர் திருக்கோவிலின் அதிசயத்தை கேட்கும் பொழுதே மெய் சிலிர்க்கும் வண்ணம் இருக்கும்.

 

1983-ம் வருட குடியரசு தினம் முதல் இங்கே பால விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டர், அப்போது அருகே அரச மரம் ஒன்று இருந்தது அது குடையாகக் கவிழ்ந்து நிழல் பரப்பத் தொடங்கியது.

 

இன்று அரசமரத்தில் சுயம்பு மூர்த்தியாக, தன்னுடன் 21 வடிவங்களை சுயம்புவாக நிறுத்திக் கொண்டு பக்தர்களுக்கு அருள்புரியும் கடவுளாக விளங்குகிறார்.

 

பொதுவாக கோவில்களில் இருக்கும் அரச மரத்தை அதி காலை பொழுதில் மட்டுமே வலம் வருவது வழக்கம்.ஆனால் இத்திருக்கோவில் இருக்கும் ஸ்தல விருட்சமான அரசமரத்தை.

 

எப்பொழுதும் வலம் வந்து பக்தர்கள் வேண்டிய வேண்டுதல் களை நிறை வேற்றிக் கொள்கின்றனர். இந்த அரசமரத்தில் 21 விநாயகர்களும்,

 

லட்சுமி நாராயணன், துர்கை , அனுமன் போன்ற தெய்வங்களும், சக்கர வியூக அமைப்பில் தேவியர்களுடன், முருகனும் வீற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பக்தர்கள் பல்வேறு பிரார்த்தனைகளுடன் வேண்டுதல்கள் வைத் திருப்பவர்கள், இந்த அரச மரத்திற்கு வஸ்திரம் சாற்றி, அபிஷேகம் செய்து நேர்த்திக் கடனை தினந் தோறும் செலுத்துகின்றனர்.

 


மேலும் ஞாயிற்று கிழமை ராகு கால வேளையில் இந்த அரசமரத்தை கையில் ஆறு எலுமிச்சை பழங்களை ஏந்திக் கொண்டு வலம் வருவதால் மனதில் நினைத்தது எல்லாம் ஆறே வாரத்தில் அப்படியே நடக்கும் என்கிறது இத்திருக்கோவிலின் தலபுராணம்.

 

இத்திருக் கோவிலில் பால விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டதில் இருந்தது சுமார் 16 ஆண்டுகள் கடந்து, ஆலயத்தை விரிவாக்கம் செய்ய நினைத்த பக்தர்கள், அந்த அரச மரத்தை அகற்ற முடி வெடுத்தார்கள்.

 

ஒரு குறிப்பிட்ட நாளில் அரச மரத்தை அகற்ற முடியாமல் பல்வேறு சோதனைகளை சந்தித்தார்கள். இறுதியில் மரத்தில் சுயம்புவாக தன்னைத் தானே வெளிப்படுத்திய விநாயகப் பெருமானை கண்ட பக்தர்கள் மெய்சிலிர்த்து நின்றார்கள்.

 

அப்போது தான் பக்தர்களுக்கு அந்த மரத்தில் தான் பால விநாயகர் குடி இருப்பதை உணர்த்தினார், இதனை மேலும் மெய்ப்பிக்கும் விதமாக ஒவ்வொரு விநாயகராக 16 வடிவங்கள் மரத்தை சுற்றிலும் தோன்றியது.

 

இதனை கண்ட அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இன்று இந்த தளத்தில்  மேலும்  ஒவ்வொன்றாக அதிகரித்து  21 சுயம்பு  விநாயகர்  மூர்த்திகளாக தோன்றி  நம்மை புல்லரிக்க வைக்கிறது.


பக்தர்கள் ஒரு முறையாவது இதனைப் பார்ப்பதற்கு கட்டாயம் செல்ல வேண்டும், இந்த பால விநாயகரை வேண்டியவர்களுக்கு கேட்டதெல்லாம் கிடைக்கும்.


நினைத்ததெல்லாம் அப்படியே நடக்கும் என்று பக்தர்களால் நம்பப்பட்டு வருகிறது.


திருவிழா : விநாயகர் சதுர்த்தி,சங்கடஹர சதுர்த்தி, ஜனவரியில் விநாயகர் இங்கே எழுந்தருளிய தினமான குடியரசு தினத்தில் ஏகதின லட்சார்ச்சனையுடன் சிறப்பு  பூஜைகள் நடக்கிறது.


கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்து இருக்கும்.


முகவரி : அருள்மிகு பால விநாயகர் திருக்கோயில் வடபழனி, சென்னை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.