Jambukeswarar Temple, Thiruvanaikaval History timings,Jambukeswarar Temple Thiruvanaikaval | History, Poojas,Lord Shiva's Temple Thiruvanaikaval Trichy,Jambukeswarar temple timings - History,Darshan, Open,Close
திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் கோவில் -
Thiruvanaikaval jambukeswarar temple History in Tamil
மூலவர் |
ஜம்புகேஸ்வரர் |
பிறபெயர்கள் |
திருவானைக்கா உடையார்,
திருவானைக்கா உடைய
நாயனார், மகாதேவபட்டர் |
அம்மன் |
அகிலாண்டேஸ்வரி |
தல மரம் |
வெண்நாவல் |
தீர்த்தம் |
காவிரி, இந்திர தீர்த்தம், சந்திர தீர்த்தம் |
தொன்மை |
1000-2000 வருடங்களுக்கு
முன் |
சிறப்பு |
நாயன்மார்கள் மற்றும்
சேக்கிழார் பெருமான் போன்றோரின் பாடல்கள் பெற்ற தலம் |
மாவட்டம் |
திருச்சிராப்பள்ளி |
மாநிலம் |
தமிழ்நாடு |
பாடியவர்கள் -
தல வரலாறு -
தலச் சிறப்புகள் -
அம்மரம் இருகரம் குவித்து வணங்கும் ஒரு முனிவரின் தலையில் இருந்து முளைத்து வளர்ந்தது போலவும், நான்கு பறவைகள் அம்மரத்திலுள்ள பழங்களைத் தின்பது போலவும் உள்ளது. அம்மரத்தின் அருகில் பூர்ணகும்பம் ஒன்று உள்ளது.
நடுநாயகமாக பத்ர பீடத்தின் மீது ஒரு சிவலிங்கமும், பத்ர பீடத்திற்குக் கீழே உள்ள உபபீடத்தில் ஒன்பது கட்டங்கள் கொண்ட சாரளத்தின் வடிவமும் உள்ளது,
யானை ஒன்று துதிக்கையில் மலர் ஏந்தி சிவலிங்கத்தை வணங்கி வழிபடுவது போலவும், சிவலிங்கத்தின் மேலே ஒரு சிலந்தியின் உருவமும் உள்ளன.
அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம் :
திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம். அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள்.
அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும் பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றதாகவும் இருக்க ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து
அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது. அன்னையின் உக்ரத்தை தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
அதிகாலையில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு
மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
அம்பிகை வழிப்பட்ட லிங்கம் -
இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அன்னையால் செய்யப்பட்டது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார்.
அம்பிகை கையில் நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிப்பட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால் லிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது.
குபேர லிங்கம்மற்றொரு சந்நிதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப்பெரிய வடிவாகவும், பலமுக ருத்திராச்சம் தாங்கியும் உள்ளது. இந்த குபேர லிங்கத்தை குபேரன் வழிப்பட்டததால் தான் சிவன் அருள் பெற்று செல்வேந்தன் ஆனான் என்ற வரலாறு எல்லோருக்கும் தெரிந்ததே.
இப்போது மக்கள் கூட்டம் அதிகம் வரும் இடங்களில் ஒன்றாக குபேர லிங்க சந்னதியும் ஆகிப்போனது.
சிற்பங்கள்பல அரிய சிற்பங்களும் இத்தளத்தில் காணக் கிடைக்கின்றன. அதில் முக்கியமானது மூன்று கால் முனிவர் சிலை. சிவலிங்க சன்னதிக்கு இடது புரம் அமைந்துள்ள வெளிப்பிரகாரத்தூண்களில் இந்த சிற்பம் காணக் கிடைக்கின்றது.
அது மட்டுமின்றி ஏகநாதர் திருவுருவம் அன்னையின் சந்ததிக்கு வெளியே உள்ள தூணில் காணக் கிடைக்கிறது. ஏகநாதர் என்பது மும்மூர்த்திகளும் சமமானவர் என்றும், எல்லோரும் ஒருவரே என்ற மாபெரும் தத்துவத்தை விளக்கவும் வல்லது.
அது மட்டுமின்றி நான்கு கால் தூணில் உள்ள மங்கைகள் எல்லோர் மனதையும் கவருகின்றார்கள். அவர்களின் கூந்தல் அலங்காரம் பிரம்மி்க வைப்பதாக உள்ளது. அதிலும் ஒரு சிறு குழந்தையை ஏந்திக்கொண்டு இருக்கும் பெண் மிக தத்திரூபமாக செதுக்கப்பட்டுள்ளாள்.
ஜம்புகேஸ்வரர் -
பஞ்சபூதத் தலங்களில் இந்தக் கோவில் நீருக்குரிய தலமாக அமைந்துள்ளது. ஜம்புகேஸ்வரரின் இந்த ஆலயமானது சோழர்களால் கட்டப்பட்டது.
ஒரு முறை சிவனின் கட்டளையை ஏற்றுக்கொண்ட அம்பிகை பூலோகத்தில் மானிடப் பெண்ணாக பிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பூலோகத்தில் பெண்ணாக பிறந்த சக்திதேவி காவிரி நீரில் லிங்கம் செய்து அந்த ஈசனை வழிபட்டு வந்தாள்.
அந்த லிங்கத்தின் மூலம் அம்பிகைக்கு சிவன் காட்சி தந்தார். சக்தி தேவியால் நீரில் உருவாக்கப்பட்ட லிங்கம் என்பதால், இந்த கோவில் பஞ்சபூத தலங்களில் நீருக்கு உரிய தலமாக இன்றளவும் இருந்து வருகிறது.
இந்தக் கோவிலில் மற்றொரு சிறப்பாக சிவன் வடிவில் அம்பாளும், அம்பாள் வடிவில் சிவனேம் பிரம்மஉற்சவத்தில் காட்சி தருவார்கள். இதற்கான ஒரு வரலாற்று கதையும் உண்டு.
ஒருமுறை பிரம்மாவிற்கு, தான் படைத்த பெண்ணை அடைய வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. இதனால் பிரம்மனுக்கு ‘ஸ்திரி தோஷம்’ உண்டானது. இந்த தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கு பிரம்மா சிவனை நினைத்து தவமிருந்தார்.
பிரம்மனுக்கு உண்டான தோஷத்தை நீக்குவதற்காக சிவபெருமான் கைலாயத்தில் இருந்து புறப்பட்டார். அந்த சமயத்தில் தன்னுடன் இருந்த அம்பிகை நானும் வருவேன் என்று கூறினாள்.
சிவன் அம்பிகையிடம் ‘பிரம்மா பெண்கள் மீது மோகம் கொள்பவர். நீ என்னுடன் வருவது சரியல்ல’ என்று கூறிவிட்டார். ஆனால் அம்பிகை சிவனின் பேச்சை வழக்கம்போல மறுத்துவிட்டார். ‘நானும் நிச்சயம் உங்களுடன் வருவேன் என்று கூறினால் அம்பிகை.’
அம்பிகை சிவனிடம் நான் “உங்களது வேடத்தில் நான் வருகின்றேன். நீங்கள் சேலை அணிந்து என் வேடத்தில் வாருங்கள் என்று கூறினாள்”.
சிவனும் இதனை ஏற்றுக்கொண்டு ‘சிவனாவர் சக்தி ரூபத்திலும், சக்தியானவள் சிவன் ரூபத்திலும்’ சென்றார்கள். சிவனும் சக்தியும் ஒன்றுதான் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த திருவிளையாடலானது நிகழ்த்தப்பட்டது.
பின்னர் பிரம்மனுக்கு சிவனும் சக்தியும் பாவ மன்னிப்பு வழங்கினர். இன்றளவும் இந்த கோவிலில் நடக்கும் பிரம்மோற்சவத்தில் சிவன், அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் எழுந்தருளி பிரம்மாவிற்கு காட்சி தருகின்றனர்.
பிரம்மா சிவனை தியானம் செய்யும் சமயமானது அமைதியாக இருந்திருக்கும் என்பதால், இந்த உற்சவத்தில் மேளதாளங்கள் எதுவும் இசைக்க படாமல் இருக்கும்.
ஜம்புநாதமுனியின் தலையில் முளைத்த வெண்நாவல் மர வரலாறு
முன்னொரு காலத்தில் ஜம்பு என்னும் முனிவர் சிவனருள் வேண்டி இத்திருத்லத்தில் தவமிருந்தார். அம்முனிவரின் தவ வலிமையால் சிவபெருமான் அவருக்கு திருக்காட்சியளித்து, ஒரு வெண்நாவல் பழத்தை பிரசாதமாகக் கொடுத்தார். ஈசன் கொடுத்த அப்பழத்தை அவர் விதையோடு விழுங்கிவிட்டார்.
அந்த விதை வெண்நாவல் மரமாக அவர் தலையிலிருந்து வெளிப்பட்டு ஜம்பு முனிவர் முக்திடைந்ததாகவும், அவ்வாறு ஜம்பு முனிவர் இக்கோவிலில் முக்தியடைந்தக் காரணத்தால் இக்கோவில் ஜம்புகேசுவரம் என்று அழைக்கப்பட்டதாகவும், அந்த வெண்நாவல் மரமே இத்திருக்கோவிலின் தல விருட்சமாக உள்ளதாகவும் தல வரலாறு கூறுகிறது.
பூர்ண கும்பத்தின் சிறப்பு :
பூர்ண கும்பம் ஒரு மங்களகரமான சின்னமாகும். அதனை மானுடர் உடலை தேவாலயத்ததுடன் ஒப்பிட்டு அதன் உள்ளும் புறமும் தூய்மைப் படுத்தப்பட வேண்டும் என்பதைப் பற்றி சிவானந்த லஹரீ சூத்திரம்-36 விவரிக்கிறது.
உமையம்மையுடன் கூடியவரே! பக்தனாகிய நான் என் தேகத்தில், பக்தியாகிய நூல் சுற்றப்பட்டதாகவும், சந்தோசம் என்னும் தீர்த்தம் நிறைந்ததாகவும், பிரகாசம் பொருந்திய உள்ள மனதாகிய குடத்தில் உம்முடைய திருவடிகளாகிய மாவிலைகளையும், ஞானமாகிய தேங்காயையும் வைத்துள்ளேன்.
சத்துவ குணத்தை வளர்க்கும் ஐந்தெழுத்து மந்திரத்தை நான் உச்சரிப்பேனாக! ஐயனே எனது தேகமாகிய வீட்டை பரிசுத்தமாக்குவாயாக! மனதிற்கு உகந்த மங்களத்தை அருள்வாயாக! என மனமார வேண்டிக்கொள்கிறேன், என்பதை உணர்த்துவதாகும்.
உமையம்மை சிவலிங்கத்தை வணங்கி வழிப்பட்ட வரலாறு -
கைலாயத்தில் யோகநிலையில் ஆழ்ந்து இருந்த சிவபெருமானை இடையூறு செய்த காரணத்தால் உமையம்மை சபிக்கப்பட்டு பூலோகம் வந்தடைந்து இத்திருக்கோவிலில் நீரால் சிவலிங்கம் ஒன்றை உருவாக்கி அதனை வணங்கி வழிப்பட்டார் என்ற ஒரு சிறப்புச் செய்தியும் உண்டு.
திருக்கைலாயத்தில் சிவபெருமானுக்கு சேவை புரிந்த சிவகணங்களில் புட்பதந்தன், மாலியவான் ஆகிய இருவர் தங்களில் யார் அதிகமாக சிவசேவை புரிகின்றனர் என்பதில் வந்த போட்டியால் தங்களை தாங்களே சபித்துக் கொண்டு மாலியவான் ஒரு சிலந்தியாகவும், புட்பதந்தன் ஒரு யானையும்; பூலோகத்தில் பிறந்து திருவானக்கா திருத்தலத்தில் சிவபெருமானை வழிப்பட்டனர்.
சிவ வழிபாட்டிலும் கூட அவ்விரண்டுக்கும் இடையே இருந்த போட்டி தொடர்ந்தது. சிலந்தியானது சிவலிங்கத்தின் மேலே வலையைப் பின்னி வெயில், மழை ஆகியவற்றிலிருந்தும்;
வெண்நாவல் மரத்தின் இலைகள் அதன் மீது விழாமலும் தினந்தோறும் சிவலிங்கத்தைப் பாதுகாத்து வந்தது. யானை தன் துதிக்கை மூலம் காவேரி நீரையும் மலரையும் கொண்டு வந்து தினந்தோறும் சிலந்தி பின்னிய வலையை அகற்றி சிவலிங்கத்தை நீராட்டி, மலர் தூவி பூசை செய்து வந்ததது.
சிவலிங்கத்தின் மேலே தினந்தோறும் தான் பின்னிய வலையை அகற்றும் யானையின் செயலை கண்ட சிலந்தி யானையை தண்டிக்க எண்ணி யானையின் துதிக்கையில் புகுந்து கடித்தது. யானையும், சிலந்தியும் உயிருக்கு போராடி இறுதியில் இரண்டுமே இறந்தன.
இவ்விரண்டின் சிவபக்தியைப் பாராட்டிய சிவபெருமான் யானையை சிவகணங்களின் தலைவனாக்கினார் என்றும் சிலந்தியை கோட்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறவி எடுக்கச் செய்தார் என்றும், திருவானைக்கா திருக்கோவில் அம்மன்னனால் கட்டப்பட்டது என்றும் ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஒன்பது துவாரங்கள் கொண்ட சாளரத்தின் சிறப்பு -
சிவலிங்கத்தின் பத்ர பீடத்திற்கு அடியில் உள்ள உபபீடத்தில் ஒன்பது கட்டங்கள் கொண்ட வடிவம் காணப்படுகிறது. மயமதம் என்னும் சிற்ப சாத்திர நூல் வரைப்படம் என்ற அத்தியாயத்தில்.
பாடல் எண் 7.8-21 ஒன்பது கட்டங்கள் கொண்ட வரைப்படத்தை பிதா வரைப்படம் என குறிப்பிடுகிறது. மயன் அருளிய ஐந்திறம் என்ற நூல் பக்கம் 10-ல் சிவபெருமானின் திருமேனிகள் பவ, சரவ, உகிர, உருத்திர, மகாதேவ, பீம, ஈசானிய, பசுபதி ஆகிய எட்டு எனவும் அந்தத் திருமேனிகள் எட்டும் சிவபெருமானின் திருவுருவத்தை மையமாகக் கொண்டவை என ஒன்பது துவாரங்கள் கொண்ட சாரளத்திற்கு விளக்கமளிக்கிறது.
பலன்கள் :
பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கும், திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவர் அமையவும், தண்ணீர் பஞ்சம் நீங்கவும் இந்த கோவிலில் வீற்றிருக்கும் அம்பாளையும் ஜம்புகேஸ்வரரையும் வேண்டிக்கொள்ளலாம்.
தரிசன நேரம்:
காலை 05.30AM – 01.00PM மாலை 03.30PM – 08.30PM
முகவரி:
அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில், திருவானைக்காவல்-620005, திருச்சி மாவட்டம்.
தொலைபேசி எண் +91-431-2230 257.
செல்லும் வழி :
திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் திருவானைக்காவல் அமைந்துள்ளது.