Vekkali Amman Temple,Vekkali Amman Worayur,Woraiyur
Vekkaliamman Temple,Sri Vekkali Amman Trichy,Vekkaliamman Temple, Trichy,Timings,
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில்
Uraiyur Vekkali amman Kovil
அருள்மிகு வெக்காளி அம்மன் கோவில் உறையூர், திருச்சி
கழுத்தில் திருமாங்கல்யமும், முத்தாரம், அட்டிகை, தலையில் பொன்முடி, கையில் வளையல்கள் அணிந்திருக்கிறாள். பீடத்தில் வலது காலை மடித்தும், இடது காலை அசுரன் மீது பதியவைத்தும் அருள்பாலிக்கிறாள். இடுப்பில் யோக பட்டம் அணிந்திருக்கிறாள் வெக்காளி அம்மன் வெட்டவெளியில் அமர்ந்திருக்கிறாள்.
Vekkali Amman Temple History in Tamil
மேல்விமானம் இல்லாமல் இருப்பதற்கு காரணம், சோழ மன்னன் பராந்தக சோழன் உறையூரை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்து கொண்டு இருந்தான்.
பின் ஒருநாள் மலர்களை பறித்துக் கொண்டிருந்த ஒருவன் அகப்பட்டான். சாரமர் முனிவர் விசாரித்ததில் அவன் பராந்தக சோழ மன்னன்தான் பறித்து வரச் சொன்னதாக கூறினான்.
சாரமா முனிவரும் மன்னரிடம் சென்று, ஏன் எனது மலர்களை பறித்து சர சொன்னீர்கள்? என்று கேட்டார். ஆனால் மன்னனோ சாரமா முனிவரை அலட்சியமாக அவையில் நடத்தி அவமானப்படுத்தி விட்டான்.
இதனால் சாரமா முனிவர், தாயுமானவரை நோக்கி தவமிருந்து தனது குறையை முறையிட்டார். தனது பக்தனின் துயர் கண்டு கோபமடைந்த இறைவன் சோழநாட்டின் மீது மண்ணை மழையாக பொழிய, மக்களின் வீடுகள் யாயும் மண்ணால் நிரம்பி வீடின்றி வெட்ட வெளியில் வந்தார்கள்.
மக்களின் இந்த துயரங்களை கண்ட ஊருக்கு வெளியே இருந்து மக்களை காத்துக் கொண்டிருந்த தெய்வமான வெக்காளியம்மன், மனம் பதைத்து தாயுமானவரான இறைவனிடம் சென்று முறையிட்டு மக்களின் துயரினை துடைத்தார்.
பின்னர் நீங்கள் அனைவரும் என்றைக்கு கூரையுடன் கூடிய வீடுகளில் வாழ்கிறீர்களோ அதுவரை நானும் திறந்த வெட்டவெளியில்தான் நிற்பேன் என்றாள்.
பிரார்த்தனை: மக்கள் தங்கள் மனதில் உள்ள குறைகளையும் கோரிக்கைகளையும் சீட்டில் எழுதி அன்னை முன்புள்ள திரிசூலத்தில் கட்டி விடுகின்றனர்.
இதன்மூலம் தங்கள் குறைகள் நிவர்த்தியாகும் என நம்புகின்றனர். அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் பெண்களுக்கு திருமண தடையும் புத்திர தோஷமும் நீங்கும்.
நேர்த்திக்கடன்:
Trichy Uraiyur Vekkaliamman Temple Festival
திருவிழா:
இங்கு ஆவணி மாதத்தில் மகா சர்வசண்டி ஹோமம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. சித்திரை மாதம் ஐந்து நாட்கள் விழா, பங்குனியில் பூச்சொரிதல் விழா, வைகாசி கடைசி வெள்ளியில் மாம்பழ அபிஷேகம், புரட்டாசியில் நவராத்திரி, தை வெள்ளி, ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள்.
Trichy Vekkaliamman Temple Timings
திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
Uraiyur Vekkali Amman Temple Address
Vekkaliyamman, S S Kovil Street, Woraiyur, Tiruchirappalli, Tamil Nadu 620003