Makara Nedunkuzhaikathar Temple Thenthiruperai
Sri Makara
Nedunkuzhaikathar Temple Thenthiruperai
Makara Nedunkuzhaikathar Temple Timings,
Thenthiruperai
அருள்மிகு மகர நெடுங்குழைக்காதர்
திருக்கோவில், தென்திருப்பேரை
Makara Nedunkuzhaikathar Temple History in Tamil
மகர நெடுங்குழைக்காதர்
கோவில் வரலாறு
ஒரு சமயம் மகாவிஷ்ணு பூதேவியின் அன்பில் மூழ்கியிருந்ததைக் கண்ட லக்ஷ்மி, பகவான் தன்மீது இவ்வளவு அன்பு செலுத்தவில்லையே என்று வருத்தப்பட்டார்.
அப்போது அங்கு வந்த துர்வாச முனிவரிடம் தனது வருத்தத்தைத் தெரிவிக்க, அவரும் பூதேவியை சந்திக்கச் சென்றார். இவர் வருவதை அறியாத பூதேவி, எழுந்து வரவேற்காததால் சினம் கொண்ட துர்வாசர்,
‘நீ லக்ஷ்மியின் உருவத்தைப் பெறுவாய்‘
என்று சாபமிட்டார் பூதேவி சாபவிமோசனம் கேட்க, தாமிரபரணி ஆற்றின்
தென்கரையில் உள்ள இந்த மகர நெடுங்குழைக்காதர் க்ஷேத்திரத்தில் தவம் செய்யுமாறு கூறினார்.
அதன்படி தவம் செய்தபோது, ஒரு பங்குனி மாதம் பௌர்ணமி அன்று நதியில் நீராடும் போது மீன் வடிவில் இரண்டு குண்டலங்கள் கிடைத்தன.
அவற்றைக் கையில் எடுத்தவுடன் பகவான் ப்ரத்யக்ஷமாக, அவருக்கே அந்த மகரக் குண்டலங்களை பூதேவி அளித்தார். அதனால் பகவானுக்கு ‘மகர நெடுங்குழைக்காதன்‘ என்ற திருநாமம் ஏற்ட்டது.
லக்ஷ்மியின் வடிவில் (ஸ்ரீபேரை) பூதேவி இங்கே தவம் செய்ததால்,
இந்த ஸ்தலத்திற்கு ‘திருப்பேரை‘ என்ற பெயர் ஏற்பட்டது.
வருணன் குருவை நிந்தை செய்த பாவம் விலக, பங்குனி பவுர்ணமியில் பகவானுக்கு திருமஞ்சனம் செய்து பாவம் விலகி நன்மை அடைந்ததாகவும்;
பகவானை பூஜித்து அது
நீங்கி மழை பெய்ததாக தல வரலாறு கூறுகிறது.
தென்திருப்பேரை கோவில்
சிறப்பு :
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 88 வது திவ்ய தேசம். நவ திருப்பதிகளில் இது 6 வது திருப்பதி (தென்திருப்பேரை). நவகிரகங்களில் இது சுக்கிரன் தலம்.
இத்தலத்தில் மகர நெடுங்குழைக்காதர் பெருமாள் பத்ர விமானத்தின்
கீழ் அருள்பாலிக்கிறார்.
மூலவர் மகர நெடுங்குழைக்காதன் என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார்.
தாயார் குழைக்காதுவல்லி
நாச்சியார், திருப்பேரை நாச்சியார் ஆகிய திருநாமங்களால் வணங்கப்படுகின்றார்.
பிரம்மா, சுக்கிரன், ஈசாந்ய ருத்ரர் ஆகியோருக்கு
பகவான் ப்ரத்யக்ஷம்.
வேதம் ஓதி வரும் வேத வித்தைகளை
காணவும், ஓடி விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சியை காணவும் இங்கு பெருமாள்
கருடனை ஒதுங்கி இருக்க கூறியதால் கருடன் சன்னதி பெருமாளுக்கு இடப்பக்கமாக விலகி அமைந்துள்ளது.
பிரார்த்தனை: அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி
வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்.
நேர்த்திக்கடன்: பெருமாளுக்கு திருமஞ்சனம்
செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
Thenthiruperai Temple Timings
திறக்கும் நேரம்: காலை 07.30 மணி முதல்
12:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 07.30 மணி வரை திறந்திருக்கும்.
தென்திருப்பேரை கோவிலுக்கு
எப்படி செல்வது?
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் இரயில் பாதையில் உள்ள ஆழ்வார் திருநகரியிலிருந்து தெற்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
திருநெல்வேலியிலிருந்து சுமார் 31 கி.மீ. தொலைவில்
அருள்மிகு தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் திருக்கோவில் அமைந்துள்ளது.
Makara Nedunkuzhaikathar Temple Address
அருள்மிக மகர நெடுங்குழைக்காதார்
திருக்கோவில், தென்திருப்பேரை – 628 623 தூத்துக்குடி மாவட்டம்.
Thenthiruperai Temple Contact Number : +91 4639 272 233