Type Here to Get Search Results !

Nava Tirupathi History,timings,Phone,map,history,Tirunelveli,Nava Tirupathi,Navathirupathi Temples in Thoothukudi,Nava temples in tamil

Nava Tirupathi History,timings,Phone,map,history,Tirunelveli,Nava Tirupathi,Navathirupathi Temples in Thoothukudi,Nava temples in tamil

 


 

நவ திருப்பதி கோவில்கள்

 

Nava Tirupathi Temples List in Tamil 

 

நவதிருப்பதி ஸ்தலங்கள் :


சோழ நாட்டில் உள்ள நவகிரக ஸ்தலங்களைப் போல, பாண்டிய நாட்டில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன அவை,

 

1.ஸ்ரீவைகுண்டம் சூரிய ஸ்தலம்

2.வரகுணமங்கை (நத்தம்) சந்திரன் ஸ்தலம்

3.திருக்கோளூர் செவ்வாய் ஸ்தலம்

4.திருப்புளியங்குடி புதன் ஸ்தலம்

5.ஆழ்வார்திருநகரி குரு ஸ்தலம்

6.தென்திருப்பேரை சுக்ரன் ஸ்தலம்

7.பெருங்குளம் சனி ஸ்தலம்

8.இரட்டைத் திருப்பதி (தேவர்பிரான்) ராகு ஸ்தலம்

9.இரட்டைத் திருப்பதி (அரவிந்த லோசனர்) கேது ஸ்தலம்

 

தசாவதாரமும் நவகிரகங்களும் :

 

பொதுவாக சிவன் கோவில்களில் மட்டுமே நமக்கு நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோவில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்வோம்.

 

வைணவ ஸ்தலமான மதுரை கூடலழகர் திருக்கோவிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது.

 

ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக

நரசிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்த்ரஸ்யச

வாமனோ விபுதேந்தரஸிய பார்கவோ பார்கவஸ்யச :

கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர

 

என்ற ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டு,

 

1.ஸ்ரீ ராமாவதாரம் சூரியன்

2.ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் சந்திரன்

3.ஸ்ரீ நரசிம்மவதாரம் செவ்வாய்

4.ஸ்ரீ கல்கியவதாரம் புதன்

5.ஸ்ரீ வாமனவதாரம் குரு

6.ஸ்ரீ பரசுராமாவதாரம் சுக்ரன்

7.ஸ்ரீ கூர்மவதாரம் சனி

8.ஸ்ரீ மச்சாவதாரம் கேது

9.ஸ்ரீ வராகவதாரம் ராகு

10.ஸ்ரீ பலராமவதாரம் குளிகன்

 

என்று, பெருமாளின் அவதாரங்கள் கிரகங்களோடு தொடர்புடையவைகளாக கூறப்பட்டுள்ளது.

 

Nava Tirupathi Temples in Tamil :

 

ஸ்ரீ வைகுண்டநாதர் (கள்ளபிரான் சுவாமி) திருக்கோவில் :

 

சூரிய ஸ்தலமான இத்திருக்கோவில், ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து 1 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 30 km தொலைவிலும் அமைந்துள்ளது. 


இக்கோவில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

 

தல மூர்த்தி: கள்ளபிரான் (ஸ்ரீ வைகுண்டநாதர்)

தல இறைவி: வைகுந்த நாயகி (கள்ளர்பிரான் நாச்சியார், சோரநாத நாயகி)

தல தீர்த்தம்: தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம்

கிரகம்: சூரிய ஸ்தலம்.

 

விஜயாசன பெருமாள் திருக்கோவில் (வரகுணமங்கை) :

 

சந்திர ஸ்தலமான இத்திருக்கோவில், தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது. 


இத்திருக்கோவில் நவதிருப்பதிகளில் முதலாவதாக அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 2 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும் அமைந்துள்ளது.

 

தல மூர்த்தி: விஜயாசனர் (வெற்றிருக்கைப் பெருமாள்)

தல இறைவி: வரகுணவல்லி, வரகுணமங்கை

தல தீர்த்தம்: தேவபுஷ்கரணி, அக்னி தீர்த்தம்

கிரகம்: சந்திரன் ஸ்தலம்.

 

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில் :


செவ்வாய் தலமாக விளங்கும் இந்த திருக்கோளூர் திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து சுமார் 36 km தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து சுமார் 34 km தொலைவிலும்


மற்றொரு நவதிருப்பதியான தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகரி செல்லும் சாலையில் 3 km வந்து பின்னர் கிளைச் சாலையில் சுமார் 2 km சென்றால், இந்த திருக்கோளூர் திருத்தலத்தை அடையலாம்.

 

தல மூர்த்தி: வைத்தமாநிதி பெருமாள் (நிஷேபவித்தன்), புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)

தல இறைவி: கோளூர்வல்லி நாச்சியார், குமுதவல்லி நாச்சியார்

தல தீர்த்தம்: குபேர தீர்த்தம், தாமிரபரணி

கிரகம்: செவ்வாய் ஸ்தலம்.

 

திருப்புளியங்குடி காய்சினவேந்தப் பெருமாள் திருக்கோவில் :


புதன் ஸ்தலமான இத்திருக்கோவில், திருநெல்வேலியில் இருந்து 32 km தொலைவிலும், திருவரகுணமங்கையில் இருந்து 1 km தொலைவிலும் திருப்புளியங்குடி என்ற ஊரில் அமைந்துள்ளது.

 

தல இறைவன்: காய்சினவேந்தப் பெருமாள், புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: எம் இடர் களைவான்)

தல இறைவி: மலர்மகள், திருமகள் (உற்சவத் தாயார்: புளியங்குடிவல்லி)

தல தீர்த்தம்: வருணநீருதி தீர்த்தம்

கிரகம்: புதன் ஸ்தலம்.

 

ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவில் :


குரு ஸ்தலமான இத்திருக்கோவில் மற்றொரு நவதிருப்பதியான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 km தொலைவிலும், திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியில் இருந்து 35 km தொலைவிலும் அமைந்துள்ளது.

 

தல இறைவன்: ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான் (நின்ற திருக்கோலம்) (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)

தல இறைவி: ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி (தாயார்களுக்கு தனித் தனி சன்னதி)

தல தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், திருச்சங்கண்ணி துறை

கிரகம்: குரு ஸ்தலம்

 

தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் திருக்கோவில் :


சுக்ரன் ஸ்தலமான இத்திருக்கோவில், திருநெல்வேலியில் இருந்து திருசெந்தூர் செல்லும் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான திருக்கோளூரில் இருந்து சுமார் 3 km தூரத்திலும் அமைந்துள்ளது.

 

தல இறைவன்: மகரநெடுங்குழைக்காதர் (அமர்ந்த திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: நிகரில் முகில் வண்ணன்)

தல இறைவி: குழைக்காதவல்லி, திருப்பேரை நாச்சியார்

தல தீர்த்தம்: சுக்கிர புஷ்கரணி, சங்கு தீர்த்தம்

கிரகம்: சுக்ரன் ஸ்தலம்.

 

திருக்குளந்தை வேங்கடவானன் திருக்கோவில் :


சனி ஸ்தலமாக விளங்கும் இத்திருக்கோவில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 38 km தொலைவிலும், மற்றொரு 


நவதிருப்பதியான திருப்புளியங்குடியில் இருந்து 5 km தொலைவிலும், இன்னொரு நவதிருப்பதியான ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து 7 km தொலைவிலும் அமைந்துள்ளது.

 

தல இறைவன் : வேங்கடவானன் (உற்சவர்: மாயக்கூத்தன்), (நின்ற திருக்கோலம் கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)

தல இறைவி: குளந்தைவல்லி, அலமேலுமங்கை

தல தீர்த்தம்: பெருங்குளம்

கிரகம்: சனி ஸ்தலம்

 

திருத்தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான் திருக்கோவில் (இரட்டை திருப்பதி)  :

 

ராகு ஸ்தலமான இத்திருக்கோவில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் சுமார் 39 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான 


பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 km தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது.

 

தல இறைவன்: தேவர்பிரான் (நின்ற திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு)

தல இறைவி: உபய நாச்சியார்கள்

தல தீர்த்தம்: வருண தீர்த்தம், தாமிரபரணி

கிரகம்: ராகு ஸ்தலம்.

 

திருத்தொலைவில்லிமங்கலம் அரவிந்த லோசனர் திருக்கோவில் (இரட்டை திருப்பதி) :

 

கேது ஸ்தலமான இத்திருக்கோவில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் சுமார் 39 km தொலைவிலும், மற்றொரு நவதிருப்பதியான 


பெருங்குளத்தில் இருந்து சுமார் 5 km தூரத்திலும், இன்னொரு நவதிருப்பதியான ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 km தொலைவிலும் அமைந்துள்ளது.

 

தல இறைவன்: அரவிந்த லோசனர் (அமர்ந்த திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு), (உற்சவர்: செந்தாமரைக்கண்ணன்)

தல இறைவி: கருத்தடங்கண்ணி

தல தீர்த்தம்: வருணை தீர்த்தம், தாமிரபரணி

கிரகம்: கேது ஸ்தலம்.

 

நவதிருப்பதி ஆலயங்களை, ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து, நத்தம், திருக்கோளூர், திருப்புளியங்குடி என நவக்ரகங்களின் வரிசைப்படி தரிசனம் செய்வது முறையாக இருந்தாலும்


இந்த நவதிருப்பதி ஸ்தலங்களை ஒரே நாளில் தரிசனம் செய்யும் வாய்ப்பு, அந்தந்த திருக்கோவில்கள் நடை திறந்திருக்கும் நேரத்தை பொறுத்து


காலையில் 7:30 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் ஆரம்பித்து, ஆழ்வார் திருநகரி, திருக்கோளூர், தேன்திருப்பேரை, பெருங்குளம், இரட்டை திருப்பதி, திருப்புளியங்குடி, நத்தம் என்ற வரிசையில் ஆலய தரிசனம், அனைத்து கோவில்களையும் தரிசித்த மனநிறைவு கிடைக்கும்.

 

இதுபோல, நவதிருப்பதி தலங்கள் திருநெல்வேலிக்கு அருகில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமல்ல, நமது பெருமைமிகு கோவில் நகரமான கும்பகோணத்தைச் சுற்றிலும் நவதிருப்பதி தலங்கள் அமைந்துள்ளன. அவை,

 

1.திருக்குடந்தை சாரங்கபாணி திருக்கோவில் சூரியன்

2.நந்திபுர விண்ணகரம் (ஸ்ரீ நாதன் கோவில்) சந்திரன்

3.நாச்சியார்கோவில் செவ்வாய்

4.திருப்புள்ளம் பூதங்குடி புதன்

5.திருஆதனூர் குரு

6.திருவெள்ளியங்குடி சுக்கிரன்

7.ஒப்பிலியப்பன் கோவில் சனி

8.கபிஸ்தலம் ராகு

9.ஆடுதுறை பெருமாள் கோவில் கேது

 

இவை அனைத்தும் ஆழ்வார்கள் பாடிய திவ்ய தேசங்களாகவும் விளங்குகின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.